தக்காளி சூப் ( குழந்தைகளுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நான்காக வெட்டிய பழுத்த தக்காளி - 1

பொடியாக அரிந்த சாம்பார் வெங்காயம் - 1/4 கப்

பொடியாக அரிந்த இஞ்சி - 1/2 இன்ச்

பட்டர் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

வெல்லம் - ஒரு பின்ச்

கார்ன்ஃப்ளார் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

குக்கரில் தக்காளி, வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்து வேக விட்டு மூன்று விசில் வந்ததும் இறக்கி ஆற வைத்து வடிகட்டவும்.

தனியாக ஒரு சட்டியில் பட்டர் போட்டு வடிகட்டிய தக்காளியை ஊற்றி அதில் வெல்லம், மிளகு தூள் சேர்த்து கார்ன்ஃப்ளார் மாவு கரைத்து ஊற்றி இறக்கி குழந்தைகளுக்கு சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: