தக்காளி குடைமிளகாய் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நன்கு பழுத்த சிகப்பு தக்காளி - 6

சிகப்பு குடைமிளகாய் - 1

வெங்காயம் - 1

இஞ்சி - சிறிய துண்டு

மிளகுத்தூள் - ருசிக்கேற்ப

வேகவைத்த காய்கறிகளின் தண்ணீர் - 1 கப்

எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் எல்லாவற்றையும் பெரிய பெரிய துண்டங்களாக நறுக்கவும். இஞ்சியை சிறிதாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு எல்லாவற்றையும் லேசாக வதக்கிக் கொள்ளவும்.

பின் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்த பின் ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.

நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின் வடிகட்டியில் வடிகட்டி கொள்ளவும்.

பின் உப்பு, வேகவைத்த காய்கறி தண்ணீர் சேர்த்து குறைந்த தனலில் சூடாக்கவும்.

சூடான பின் மிளகு தூள் தூவி உடனே சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: