சைனீஸ் சூப்
தேவையான பொருட்கள்:
பூண்டு - 1 பல்
வெங்காயம் - 1/4 பகுதி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
ஃபிஷ் சாஸ் - 2 தேக்கரண்டி
மல்லி தழை - சிறிது
சிக்கன் க்யூப் - பாதி
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
முட்டை - 1
ஆலிவ் ஆயில் - 1 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், பூண்டு, மல்லி இவைகளை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
ஒரு சட்டியில் ஆலிவ் ஆயில் ஊற்றி அதில் பூண்டை போட்டு வதக்கவும்.
பூண்டு கொஞ்சம் வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
லேசான ப்ரவுன் நிறம் வந்ததும் அதில் 2 அல்லது 3 பேருக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீரில் ஃபிஷ் சாஸ் ஊற்றவும்.
பின் சோயா சாஸ் ஊற்றவும்.
சிக்கன் க்யூப் சேர்க்கவும்.
முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளை கருவை தனியாக பிரித்தெடுக்கவும்.
ஒரு கோப்பையில் கார்ன் ஃப்ளார் மாவை கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து சூப்பில் ஊற்றவும். மல்லியையும் சேர்க்கவும்.
இறுதியாக பிரித்து வைத்துள்ள முட்டையின் வெள்ளை கருவை ஸ்பூனால் கலக்கி விட்டு அதையும் சூப்பில் ஊற்றவும்.
அனைத்தையும் ஊற்றிய பின் கரண்டியால் கலக்கி விடவும். சூப்பை கொஞ்ச நேரம் கொதிக்க விடவும். அதிலேயே முட்டையும் வெந்துவிடும்.
சூடாக சாப்பிட சூப்பராக இருக்கும்.
குறிப்புகள்:
சோயாசாஸ், ஃபிஷ்சாஸ், சிக்கன் க்யூப் இவை மூன்றிலும் உப்பு சுவை இருப்பதால் உப்பு சேர்க்க தேவையில்லை.