சிலிப்பி குடல் சூப்
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
சிலிப்பி குடல் - 1 கப்
விளக்கெண்ணைய் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10 என்னம் (தட்டிப் போடவும்)
மிளகுத்தூள் - 3 சிட்டிகை
செய்முறை:
குக்கரில் கழுவி சுத்தம் செய்த சிலிப்பி குடலை போட்டு அதனுடன் விளக்கெண்ணைய், மஞ்சள் தூள், சீரகம், சின்ன வெங்காயம் அனைத்தயும் சேர்த்து தண்ணீர் கொஞ்சம் அதிகமான அளவு ஊற்றி உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
பின் குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெயிட்டை போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பின் 3 விசில் வந்ததும், நிறுத்தி இறக்கி மிளகுத்தூள் தூவி சூப் பவுலில் பரிமாறவும்.