சிக்கன் வெஜ் சூப்
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 200 கிராம்
மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய கோஸ் - 1/4 கப்
அரை வட்டமாக நறுக்கிய கேரட் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - 1/4 கப்
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
கொத்தமல்லித் தழை - சிறிது
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சில்லி ப்ளேக்ஸ் - 1 தேக்கரண்டி
சோளமாவு - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு டம்ளர் தண்ணீரில் சோள மாவை கரைத்து வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து 2 தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், மிளகு, கரம் மசாலா தூள் சேர்த்து பொரிந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக வெங்காயம், தக்காளி, கேரட், கோஸ் இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லித் தழை, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து சிக்கன் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதி வரும் போது சோள மாவுக் கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.
நன்கு கொதி வந்ததும் மீதமுள்ள வெண்ணெயை சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்து இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.
குறிப்புகள்:
ப்ரெட் டோஸ்ட் (அ) ஆப்பம் (அ) சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினால் மிளகுத் தூளின் அளவை ஒரு தேக்கரண்டியாகவும், பச்சை மிளகாயை ஒன்றாகவும் குறைத்து கொள்ளவும்.