சிக்கன் போரிட்ஜ்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 500 கிராம்
பிரவுன் ரைஸ் அல்லது பொன்னி பச்சரிசி - 2 கப்
சிக்கன் ஸ்டாக் - 6 கப் அல்லது சிக்கன் ஸ்டாக் க்யூப் - 1
இஞ்சி - 3 துண்டு
சின்ன வெங்காயம் - 10
வெங்காயத்தாள் - 4 அல்லது 5
சோள மாவு - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைபட்டால்
செய்முறை:
சிக்கன் ஸ்டாக் செய்யும் முறை:
கோழியை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு 2 லிட்டர் நீர் சேர்க்கவும். இதனுடன் உப்பு 2 வெங்காயத்தாள் இஞ்சி 1 துண்டு போட்டு கொதிக்க விடவும்.
அரை மணி நேரம் கொதித்த பிறகு வடிக்கட்டி கொள்ளவும். 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால் கொழுப்பு முழுவதும் மேலே ஒரு லேயராக வந்து விடும்.
அதை நீக்கி விட்டால் கொழுப்பு இல்லாத ஸ்டாக் ரெடி.
சூப் செய்யும் முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசியை களைந்து எடுத்து கொள்ளவும்.
அதனுடன் வட்டமாக வெட்டிய இஞ்சி, சிக்கன் ஸ்டாக் சேர்த்து குக்கரில் 6 விசில் வரை வேக விடவும்.
வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி லேசாக சோள மாவு தூவி எண்ணெயில் பொரித்து வைத்து கொள்ளவும்.
குக்கரை திறந்து கஞ்சியில் உள்ள இஞ்சியை நீக்கவும். ஸ்டாக் செய்யும் போது வேக வைத்த சிக்கனை மெல்லியதாக வெட்டி கஞ்சியில் சேர்க்கவும்.
(ரெடிமேட் ஸ்டாக் பயன்படுத்தினால் அரிசி வேக வைக்கும்போதே கோழியை சிறியதாக வெட்டி சேர்த்து வேக விடவும். உப்பும் சேர்க்கவும்)
பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி மேலே பொரித்த வெங்காயம், வெங்காயத்தாள் தூவவும்.
சிக்கன் போரிட்ஜ் ரெடி.
குறிப்புகள்:
ஸ்டாக் வீட்டில் செய்ய முடியவில்லை என்றால் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் ஸ்டாக் பயன் படுத்தலாம்.
ஸ்டாக் க்யூப் வாங்கி தண்ணீரில் கரைத்தும் பயன்படுத்தலாம்.