சிக்கன் பாஸ்தா சூப்
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 1/4 கிலோ
பாஸ்தா அல்லது நூடுல்ஸ் - 1 கோப்பை
வெங்காயம் - 1
கேரட் - 1 கோப்பை
காலிப்ளவர் - 1 கோப்பை
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சத்தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி
பூண்டு விழூது - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - 4 கோப்பை
செய்முறை:
கோழியில் உள்ள எலும்புகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் எல்லா காய்களையும் நறுக்கி கொள்ளவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை கொட்டி வறுக்கவும்.
பிறகு கோழித்துண்டுகளை போட்டு நன்கு வேகும் வரை வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கிவிட்டு நறுக்கி வைத்த காய்களை போட்டு கிளறி விடவும்.
தொடர்ந்து உப்புத்தூள்,மஞ்சத்தூள்,மிளகுத்தூளை தூவி நன்கு கிளறி விட்டு தண்ணீரை சேர்க்கவும்.பின்பு கொத்தமல்லியை தூவிவிட்டு கொதிக்கவடவும்.
நன்கு கொதித்தவுடன் பாஸ்தாவை போட்டு கலக்கிவிடவும்.
அடிப்பின் அனலை மிக குறைந்த அனலில் வைத்து அடி பிடிக்காதபடி அடிக்கடி கிளறிவிடவும்.
பத்து நிமிடங்காள் கழித்து இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.
குறிப்புகள்:
பிரியப்பட்டால் சிறிது சீஸ் தூளை தூவி சூடாக பரிமாறவும்.