கோழி முட்டை சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி (எலும்புடன்) - 1/4 கிலோ

முட்டை - 1

காரட், பீன்ஸ் - 1/4 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 2 பல்

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

வெள்ளை மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி

சோம்பு தூள் - 1/4 தேக்கரண்டி

புதினா - சிறிது

பாதாம் தூள் அல்லது விழுது - 2 மேசைக்கரண்டி

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

காய்கறிகளை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய காய்கறிகளுடன், நறுக்கிய தக்காளி, ஒரு பச்சை மிளகாய், சுத்தம் செய்த கோழி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை வேக விடவும்.

பின்பு பாதாம் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

தவாவில் எண்ணெய் ஊற்றி நசுக்கிய பூண்டு, மீதமுள்ள பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

தாளித்தவற்றை சூப் கலவையில் சேர்த்து ஒரு கொதி விட்டு, முட்டையை உடைத்து ஊற்றவும்.

புதினா, வெள்ளை மிளகுத் தூள் சேர்த்து சூடாக சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: