கோழி சூப்
தேவையான பொருட்கள்:
கோழி எலும்புடன் - 100 கிராம்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1
தக்காளி பொடியாக நறுக்கியது - 1
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1/2 தேக்கரண்டி.
பூண்டு பொடியாக நறுக்கியது - 1/2 தேக்கரண்டி.
கொத்தமல்லி, புதினா பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு.
மிளகு - 1 தேக்கரண்டி.
துவரம் பருப்பு - 3 தேக்கரண்டி.
வெண்ணெய் - 2 தேக்கரண்டி.
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ப்ரஷர் குக்கரில் வெண்ணெய் போட்டு, பட்டை, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி, பூண்டு, மிளகு, துவரம் பருப்பு, கொத்தமல்லி, புதினா இவற்றையும் அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
இப்போது கோழிக்கறியை கலந்து, உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு வெய்ட் போட்டு சிம்மில் ஐந்து நிமிடம் ப்ரஷர் குக் செய்து இறக்கி விட வேண்டும்.
சூப் ஆறியவுடன், வடிகட்டி, வெந்த எலும்பில்லாக் கோழித்துண்டுகளை மட்டும் கலந்து, மிளகுத்தூள் தூவி சூப் பவுலில் பரிமாறவும்.