கோங்னாமுல் சூப்
0
தேவையான பொருட்கள்:
முளைக்கட்டிய சோய்பீன்ஸ் (கோங்னாமுல்) - 1 கப் (விருப்பட்டால் கட் பண்ணிக் கொள்ளவும்)
பூண்டு பல் - 2 (சைஸை பொருத்து)
ஸ்ப்ரிங் ஆனியன் - 1/2
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பூண்டை மிக மிக மெல்லிய துண்டுகளாகவும், ஸ்ப்ரிங் ஆனியனை மெல்லிய வட்ட வடிவ துண்டுகளாகவும் நறுக்கி, முளைக்கட்டிய சோய்பீன்ஸ் மற்றும் உப்பு ஆகியவற்றை 2 1/2 கப் தண்ணீரில் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான சத்தான கொரியன் ஸ்டைல் சூப் தயார்.