கேரட் தக்காளி சூப்
0
தேவையான பொருட்கள்:
கேரட் - 1/4 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
மைதா - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கப் (400 மில்லி)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடம் போட்டு, தோல் உரித்து, பொடியாக நறுக்கவும்.
கேரட்டை மெல்லிய வட்டமாக நறுக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் வெண்ணெய் போட்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, கேரட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
மைதா, தக்காளி, மிளகு தூள், உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
கரண்டியால் நசுக்கி விட்டு, சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டவும்.
தேவையானால் 1 ஸ்பூன் ஃப்ரஷ் க்ரீம் மேலே ஊற்றி பரிமாறலாம்.