கேபேஜ் கார்ன் கிளியர் சூப்
0
தேவையான பொருட்கள்:
நறுக்கிய முட்டை கோஸ் - 1 கப்
ஃப்ரோசன் கார்ன் - 1/4 கப்
சூப் கியூப் - 1
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.
செய்முறை:
சூப் வைக்கும் பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர்,ஒரு சூப் கியூப் தட்டி போட்டு கொதி வரட்டும்,கொதிவரவும் நறுக்கிய முட்டை கோஸ்,கார்ன் சேர்க்கவும்.
முட்டை கோஸ்,கார்ன் வெந்தவுடன் சோயாசாஸ்,வினிகர் சேர்க்கவும்.
தேவைக்கு உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும். உப்பு சூப் கியூபில் இருக்கும். பார்த்து சேர்க்கவும்.
கோப்பைகளில் விட்டு ஸ்பூன் போட்டு பரிமாறவும்.