கீரை ஸ்பெஷல் சூப்
0
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
சிறு கீரை அல்லது அரைக்கீரை - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
பூண்டு - 2 பல்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
சோம்பு - ஒரு சிட்டிகை
புதினா - ஒரு கைப்பிடி
மல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்ப்பால் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காய்ப்பால் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகப் போட்டு மூன்று கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
ஆவி போனதும் திறந்து, ஆறவைத்து நைஸாக அரைத்து எடுக்கவும்.
வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறவும்.
குறிப்புகள்:
எந்த வகை கீரையை சேர்த்தும் இந்த சூப்பை செய்யலாம்.