கிரீம் ஆஃப் டொமேட்டோ சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இரண்டாக நறுக்கிய பெங்களூர் தக்காளி - 5

பீட்ரூட் - 1 துருவியது

பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டிரண்டு

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

பூண்டு - 5 பல்

முழு மிளகு - 1 தேக்கரண்டி

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

ஒயிட் சாஸ் - 1/2 கப்

செலரி - சிறிது

ஒயிட் சாஸ் - 4 மேசைக்கரண்டி

ஒயிட் சாஸ் தயாரிக்க:

வெண்ணெய் - 50 கிராம்

மைதா அல்லது சோள மாவு - 1 கப்

பால் - 2 கப்

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

வெண்ணெயை உருக்கி பூண்டு, முழு மிளகு பட்டை, ஏலம், கிராம்பு, பீட்ரூட், செலரி போன்றவைகளை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி பின் வெங்காயத்தை வதக்கி சுருண்டவுடன் தக்காளியை போட்டு வதக்கவும். தோல் சுருங்கியவுடன் தக்காளி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி குக்கரி இரண்டு விசில் விட்டு இறக்கி ஆற விடவும்.

ஆறியதும் ஜீஸ் எடுக்கும் கருவியில் (அ) கையால் பிசைந்து (அ) கரண்டியால் மசித்து பெரிய வடிகட்டி கொண்டு வடிகட்டவும்.

மொத்தமாக செய்து வைத்திருக்கும் ஒயிட் சாஸிலிருந்து நான்கு மேசைக்கரண்டி போட்டு வடிகட்டி வைத்து இருக்கும் தக்காளி சாறில் கலக்கவும்.

இப்போது செய்து வைத்திருக்கும் சூப் ரொம்ப கட்டியாக இருந்தால் சூப் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து உப்பு,மிளகு தூள் தூவி சூடான கட்லெட்டுடன் குடிக்கவும்.

ஒயிட் சாஸ் தயாரிக்கும் முறை:

ஒரு கனமான பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கவும் லேசாக உருகிக் கொண்டிருக்கும் போது மைதா (அ) சோளமாவை சிறிது சிறிதாக போட்டு வறுக்கவும்.

பின் பாலை ஊற்றி கை விடாமல் கிளறவும்.

குறிப்புகள்: