காரட் சூப்
0
தேவையான பொருட்கள்:
காரட் - 2
பாசிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 2 பல்
கொழுப்பு இல்லாத பால் - 1/2 கப்
சில்லி சாஸ் - 1/2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காரட், பாசிப்பருப்பு, பூண்டு வேக வைத்து அரைத்து வடிகட்டி, அதனுடன் பால், சில்லிசாஸ், சோயா சாஸ் மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.