காய்கறி ராஜ்மா சூப்
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய தக்காளி - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
உருளை கிழங்கு (சதுரங்கள்) - 1 கப்
பொடியாக நறுக்கிய முட்டை கோஸ் - 1/2 கப்
வேகவைத்த ராஜ்மா - 2 மேசைக்கரண்டி
வேகவைத்த பார்லி - 1 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பொடித்த மிளகு - 1/4 தேக்கரண்டி
பொடி உப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கப் தக்காளி, 1/2 கப் வெங்காயம், உருளைக்கிழங்கை 3 கப் தண்ணீரில் உப்பு சேர்த்து ப்ரெஷர் குக்கரில் வேகவைக்கவும்.
வேகவைத்தபின் அதை நன்றாக ஆறவைத்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
நறுக்கிய முட்டை கோஸை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மீதமுள்ள தக்காளி, ராஜ்மா, பார்லி சேர்த்து 1/2 கப் தண்ணீர் மற்றும் உப்பு-மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக சூப் பவுலில் பரிமாறவும்.