காய்கறி சூப் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 5

சுரைக்காய் துண்டுகள் - 1/2 கப்

பீர்க்கங்காய் துண்டுகள் - 1/2 கப்

பீட்ரூட் துண்டுகள் - 1/2 கப்

கரட் துண்டுகள் - 1/2 கப்

சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

மிளகுப்பொடி - 1/2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளை 6 கப் நீரில் வேக வைத்து, ஆற வைத்து அரைத்து வடிகட்டவும்.

பின் போதுமான நீர், உப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்க்கவும்.

கடுகு, சீரகம், காயம் இவற்றை நல்லெண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.

பிறகு இந்த சூப்பை கொதிக்க விடவும். சூப் பொங்கியதும் இறக்கி எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்..

குறிப்புகள்: