ஓட்ஸ் வெஜ் போரிட்ஜ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 2 மேசைக்கரண்டி

பொடியாக நறுக்கின கேரட் - 1 மேசைக்கரண்டி

பொடியாக நறுக்கின பீன்ஸ் - 1 மேசைக்கரண்டி

பொடியாக நறுக்கின முட்டை கோஸ் - 1 மேசைக்கரண்டி

பொடியாக நறுக்கின இஞ்சி - 3/4 தேக்கரண்டி

பொடியாக நறுக்கின பூண்டு - 1 தேக்கரண்டி

பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் (தேவைப்பட்டால்) - 1/4 தேக்கரண்டி

வெஜ் ஸ்டாக் அல்லது சிக்கன் ஸ்டாக் பவுடர் - 1/4 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு (தேவைப்பட்டால்) - 1/4 தேக்கரண்டி

சர்க்கரை (சீனி) - 1/4 தேக்கரண்டி

மிளகு தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகள், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

சூப் செய்ய போகும் பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், வெஜ் அல்லது சிக்கன் ஸ்டாக் பவுடர், உப்பு, சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதி வந்ததும் கேரட், பீன்ஸ் சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் வேக விடவும்.

அதன் பின்னர் முட்டைகோஸ் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.

இந்த காய்கறி கலவையில் ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.

சுவையான ஓட்ஸ் போரிட்ஜ் தயார். தேவையான அளவு எலுமிச்சை சாறு மற்றும் மிளகு தூள் தூவி சூடாக சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்:

அதிகம் காரம் வேண்டாம் என்பவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து விடலாம். எலுமிச்சைசாறும் அவரவர் ருசிகேற்ப சேர்த்துக் கொள்ளலாம். மேலே சிறிது கார்ன்ஃப்ளேக்ஸ் தூவி சாப்பிட்டால் இடையிடையே மொறுமொறுப்பாக சாப்பிட சுவையாக இருக்கும்.