ஓட்ஸ் காய்கறி சூப்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 ௧ப்
பச்சை பட்டாணி - 5 மேசைக்கரண்டி
மக்காச்சோளம் – 3 மேசைக்கரண்டி
காரட் – 1
பச்சை மிளகாய் – 1
சின்ன வெங்காயம் – 5
தக்காளி – 2
மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைரசம் - 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து – 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 3 கொத்து
மல்லி இலை – 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - 2 ௧ப்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காரட்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் வைத்துக்கொள்ளவும்.
நறுக்கின காய்கறி, ஓட்ஸ், மிளகாய் அனைத்தையும் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
பின்னர் திறந்து சீரகத்தூள், உப்பு, மல்லி இலை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சிறிது நறுக்கின வெங்காயம் போட்டு தாளித்து கொதிக்கும் சூப்பில் கொட்டவும்.
இறக்கும்போது எலுமிச்சைரசம் ஊற்றிப் பரிமாறவும்.