ஓட்ஸ் அண்ட் வெஜிடபிள் போரிட்ஜ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 4 மேசைக்கரண்டி

கேரட், பீன்ஸ், கோஸ் சேர்த்து அரிந்தது - 1 கப்

சிக்கன் (அல்லது) வெஜிடபிள் ஸ்டாக் க்யூப் - 1/2

பூண்டு - 2 பல்

இஞ்சி - 1 சென்டிமீட்டர் துண்டு

வெங்காயத்தாள் - 1

மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

எண்ணெய் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சூப் பாத்திரம் அல்லது வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி பொடியாக அரிந்த பூண்டு, இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பொடியாக வெட்டிய காய்கறிகளை சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கி 3 கப் தண்ணீர் சேர்க்கவும்.

சிக்கன் ஸ்டாக் க்யூப் கலந்து 3 நிமிடம் கொதிக்க விடவும். ஓட்ஸை தூவி கிளறி மேலும் 3 நிமிடம் வேகவைத்து இறக்கி வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.

குறிப்புகள்: