எலும்பு சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெஞ்சு எலும்பு அல்லது சாதா எலும்பு - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 4

பச்சை மிளகாய் - 3

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

தாளிக்க:

பட்டை - 1

கிராம்பு - 1

அன்னாசிப்பூ - 1

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கழுவிய எலும்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றுடன் மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்துடன் 4 வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்து போட்டு வேக விடவேண்டும். (வேண்டுமென்றால் குக்கரில் வைக்கலாம்).

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, சூப்பை ஊற்றி கொதித்தவுடன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: