ஆட்டு கால் சூப் (குழந்தைகளுக்கு)
தேவையான பொருட்கள்:
ஆட்டு கால் - 4 துண்டு
வெங்காயம் - 1/2 பாகம்
தக்காளி - 1/2 பாகம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி
முழு சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் பால் - 1/4 கப்
கொத்தமல்லி - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு பின்ச்
நெய் - ஒரு சொட்டு
உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
காலை நல்ல தேய்த்து கழுவி அதில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் (தேங்காய் பால் தவிர) சேர்த்து குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து இருபது நிமிடம் வேகவிடவும்.
மூன்று விசில் வந்ததும் தீயை குறைத்து வைத்து வேகவிடவும்.
வெந்து இறக்கியதும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு அதை பெரிய புளி வடிகட்டியில் வடித்து அதில் ஒரு சொட்டு நெய் சேர்த்து குழந்தைகளுக்கு சாதத்திலோ, இட்லி, தோசை, இடியாப்பத்திலோ பிசைந்து கொடுக்கவும்.
இல்லை குடிக்க வைக்க முடிந்தால் குடிக்கவைக்கவும்.