ஆடிக்கூழ்
0
தேவையான பொருட்கள்:
அரிசிமா - 1/2 கப்
பயறு - 1/4 கப்
தேங்காய்ப்பால் - 2 கப்
பனங்கட்டி - 3/4 கப்
தேங்காய்ச்சொட்டு - 3 மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பயறு, அரிசிமாவை தனித்தனியாக வெறும் சட்டியில் போட்டு வறுக்கவும்.
2 கப் தணீர கொதிக்கவைத்து அதனுள் வறுத்த பயறை போட்டு அவிய விடவும்.
பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து அதனுள் விடவும்.
மா கட்டிபடாமல் இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.
மா வெந்ததும் (கூழ் தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி , உப்பு, தேங்காய்ச்சொட்டு சேர்த்து கிளறி இறக்கி சுடச்சுட அருந்தவும்.