வெள்ளை உப்புமா

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

கடுகு - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 1

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

முந்திரி - 3

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2

கறிவேப்பிலை - மூன்று ஆர்க்

துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

நெய் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் ரவையை லேசாக வறுத்து தட்டில் கொட்டி ஆற விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, முந்திரி பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து இரண்டே கால் கப் தண்ணீர் ஊற்றி உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ஆற வைத்து ரவையை ஒரு கையால் போட்டுக் கொண்டு ஒரு கையால் கட்டி பிடிக்காமல் கிளற வேண்டும். வெந்ததும் இறக்கவும்.

குறிப்புகள்: