வெந்தய இட்லி
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி - 3 கப்
வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஆமணக்கு விதை - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும் வெந்தயத்தையும் தனித் தனியே ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்
அரிசியை கிரைண்டரில் அரையுங்கள். பாதி அரைபடும்போதே, ஆமணக்கு விதைகளைத் தோலுரித்துச் சேருங்கள். நன்கு அரைபட்டதும் மாவை வழித்தெடுங்கள். பிறகு, ஊறிய வெந்தயத்தைப் போட்டு அரைத்தெடுங்கள்.
பிறகு, அதை மாவில் கலந்து, உப்பு சேர்த்துக் கரைத்து, 6 முதல் 8 மணி நேரம் புளிக்கவிடுங்கள்
புளித்த பின், இட்லித்தட்டில் ஊற்றி வேகவிடுங்கள்.