வெந்தயக்கீரை ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

நறுக்கிய வெந்தயக்கீரை - 1 கட்டு

பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1/4 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா - 2 சிட்டிகை

மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப (1 தேக்கரண்டி)

வெண்ணைய் - 1 தேக்கரண்டி

கெட்டித்தயிர் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாணலியில் 1 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி சீரகம், சோம்பு தாளித்து கீரையை போட்டு ஒரு வதக்கு வதக்கி தனியா பொடி, கரம் மசாலா பொடி, மிளகாய் பொடி, உப்பு போட்டு ஒரு வதக்கு வதக்கி கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

1 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

பின் கோதுமை மாவில் கீரை கலவையை கொட்டி வெண்ணைய், தயிர், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி பதம் வந்ததும் உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக சுட்டு இரு புறமும் எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்.

சூப்பரான வெந்தயக்கீரை ரொட்டி ரெடி.

குறிப்புகள்: