வெண்பொங்கல் (1)
8 - Good!
3 நட்சத்திரங்கள் - 8 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 டம்ளர்
பாசிப்பருப்பு - 3/4 டம்ளர்
பால் - 1 டம்ளர்
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
இஞ்சி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1/4 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை சிவக்க வறுக்கவும்.
அரிசியை பாசிப்பருப்புடன் போட்டு, பாலுடன் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும்.
உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து வெந்த அரிசியுடன் சேர்க்கவும்.
1 ஸ்பூன் நெய்யில் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரியை வறுத்து, மீதி நெய்யோடு சாதத்தில் கொட்டி, நன்கு கிளறி, 5 நிமிடம் அடுப்பில் வைத்திருந்து (சிம்மில்) இறக்கவும்.