வெஜ் ப்ளைன் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்:
ப்ளைன் நூடுல்ஸ் பாக்கெட் - 200 கிராம்
கேரட் - 100 கிராம்
கோஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
அஜினொமோட்டோ (விருப்பமானால்) - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கேரட், கோஸ், வெங்காயம் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை நீளவாக்கில் நறுக்கி நன்றாக நீரில் அலசி விதை நீக்கி பொடியாக நறுக்கவும். இவ்வாறு செய்வதால் காரம் இருக்காது.
தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்து நூடுல்ஸை போட்டு வேக வைக்கவும்.
வெந்ததும் இறக்கி தண்ணீரை வடித்து ஆற வைக்கவும். வடிக்கட்டும் போது குளிர்ந்த நீர் ஊற்றி வடிக்கட்டினால் நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் வதங்கியதும் நறுக்கின கோஸ் மற்றும் கேரட் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய காய்கறிகளுடன் அஜினொமோட்டோ, உப்பு, மிளகு சேர்க்கவும்.
அதன் பின்னர் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு பிரட்டி விடவும்.
குறிப்புகள்:
டொமெட்டோ கெட்சப்புடன் பரிமாறலாம்