வெஜ் உப்புமா
தேவையான பொருட்கள்:
வறுத்த ரவை - 1 கப்
பொடியாக நறுக்கிய காய்கள் (கேரட், பீன்ஸ், பட்டாணி) - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லிதழை - சிறிது
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு -தாளிக்க
தண்ணீர் - 2 கப்
எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்களை சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
வெங்காயம்,மிளகாய்,இஞ்சி பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு கடுகு, பருப்புகளை போட்டு தாளித்து வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,இஞ்சி போட்டு வதக்கவும்.
தக்காளி போட்டு வதக்கி ,காய் சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு போட்டு,கொத்தமல்லி தூவி கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதிக்கும் பொழுது ரவையினை தூவி கைவிடாமல் கிளறவும்.தண்ணீர் வற்றவும்,ரவை வேகவும் சரியாக இருக்கும். வெந்தவுடன் இறக்கவும்.