வெங்காய தோசை

on on on off off 7 - Good!
3 நட்சத்திரங்கள் - 7 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

நன்கு புளித்த தோசை மாவு - 1 கப்

வெங்காயம் - 2 பெரியது

கடுகு - 1/4 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதக்கியவற்றை எடுத்து நன்கு புளித்த தோசை மாவில் சேர்க்கவும்.

வதக்கிய வெங்காயத்தை மாவுடன்,நன்கு கலக்கி தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். உப்பின் அளவை சரிப்பார்த்துக் கொள்ளவும்.

இந்த மாவை தோசைக்கல்லில் வார்த்து, முறுகலாக சுட வேண்டும். இரண்டு பக்கமும் ப்ரவுன் நிறமாக வேண்டும்.

சுவையான வெங்காய தோசை தயார்.

குறிப்புகள்:

இதனுடன் சட்னி மற்றும் பருப்புபொடி தொட்டு சாப்பிடலாம்.