வெங்காய அடை

on on on off off 8 - Good!
3 நட்சத்திரங்கள் - 8 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப் ( கொரகொரப்பானது)

நாட்டு வெங்காயம் - 25

பச்சை மிளகாய் - 2

முட்டை - 1

தேங்காய் பூ - 1/2 கப்

நெய் - 3 ஸ்பூன்

சோடா உப்பு - சிறிது

உப்பு - தே.அளவு

தண்ணீர் - சிறிது

செய்முறை:

அடை செய்வதற்கென்றே உள்ள அரிசி மாவில்பொடியாக அரிந்த மிளகாய், முட்டை,தேங்காய் பூ,உப்பு,சோடா உப்பு ஆகியவற்றை போட்டு கிளரி வைக்கவும்.

ஒரு சட்டியில் நெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

வெங்காயத்தையும் நெய்யோடு மாவில் ஊற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அடை பதத்திற்கு மாவை தயார் செய்யவும்.

மாவை கொஞ்ச நேரம் அப்படியே ஊற விடவும்.

இப்போது தண்ணீர் கொஞ்சம் வற்றி இருக்கும்.

தேவையெனில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

தவாவை அடுப்பில் வைத்து இந்த மாவை 1 கரண்டி எடுத்து அதில் ஊற்றி லேசாக வட்ட வடிவில் தட்டி விடவும்.

சுற்றிலும் கொஞ்சம் நெய் ஊற்றி ஒரு மூடி போட்டு மூடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்.

இதனுடன் கறி குழம்பு வைத்து சாப்பிடுங்கள்.

குறிப்புகள்: