ரோல் தோசை
தேவையான பொருட்கள்:
தோசைமாவு - 1 கப்
முட்டை - 2
கடுகு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் - அரை மூடி
பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
சிவப்பு பழ மிளகாய் (அ) வரமிளகாய் - 3
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து தேங்காய் சட்னி தயாரித்து கொள்ளவும். அதில் கடுகு தாளித்து கலந்து கொள்ளவும்
முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள சட்னி சேர்த்து கலந்து கொள்ளவும். (அளவு: ஒரு முட்டைக்கு ஒரு குழிக்கரண்டி சட்னி )
தோசை மாவை சூடான கல்லில் தோசையாக வார்க்கவும்
அதில் உடனே கலந்து வைத்துள்ள சட்னி-முட்டை கலவையை பரவலாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விடவும்
சிவந்ததும் திருப்பி போடவும்
தோசையை ரோலாக சுற்றி துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்
குறிப்புகள்:
இதனுடன் சாஸ் அல்லது காரசட்னி, தக்காளி சட்னி சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.