ரொட்டி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்

கோதுமை மாவு - 2 கப்

சர்க்கரை - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதா, கோதுமை மாவில் உப்பு, சர்க்கரை, மூன்று கப் தண்ணீர் சேர்த்து ஒரு பெரிய போர்கால் நல்ல கிளறி ஐந்து நிமிடம் வைத்து விடுங்கள்.

இப்போது மாவு நல்ல சேர்ந்து இருக்கும் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நல்ல பிசையுங்கள். தண்ணீர் தேவைப்பட்டால் கொஞ்சம் தெளித்து கொள்ளுங்கள். நல்ல அடித்து பிசைந்து கடைசியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிசைந்து சிறு உருண்டைகளாக போட்டு சப்பாத்தி பலகையில் வட்ட வடிவமக தேய்த்து புடவை கொசுவம் போல் மடித்து சுருட்டுங்கள்.

எல்லா உருண்டைகளையும் அதே போல் செய்து மறுபடியும் வட்ட வடிவமாக தேய்த்து தவ்வாவில் போட்டு சுட்டெடுங்கள்.

கொசுவம் போல் மடிக்க தெரியாதவர்கள் சதுரவடிவில் தேய்த்து சதுரமாக உருட்டி சுட்டெடுங்கள்.

மடித்த உருண்டை ஊறினால் தான் நல்ல தேய்க்க வரும்.

குறிப்புகள்: