ருமாலி ரொட்டி
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1/2 கிலோ
பால் - 1/2 கப் அல்லது 100 மிலி
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மைதா, சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து இருமுறை சலிக்கவும்.
பாலை வெதுவெதுப்பாக்கி மாவில் சேர்த்து மிருதுவாக பிசையவும். போதவில்லை யெனில் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி ஈரத்துணியால் மூடி பிரிஜ்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.
பிறகு எடுத்து உருண்டைகளில் குழி செய்து சிறிது எண்ணெய் விட்டு மூடி திரும்ப பிரிஜ்ஜில் வைக்கவும்.(குறைந்தது ஒரு மணி நேரம்)
பெரிய வாணலியை நன்கு அடியில் தேய்து கழுவி விட்டு, அடுப்பில் குப்புற சூடு செய்யவும்.(அடி மேல் பக்கம் இருப்பது போல்)
உருட்டு வைத்த உருண்டைகளை மிக மெல்லியதாக தேய்த்து, வாணலி மேல் போட்டு நன்கு சுட்டதும் எடுத்து நான்காக மடித்து, சூடாக பரிமாறவும்.