ராகி புட்டு உப்புமா
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2 அல்லது காரத்திற்கேற்ப
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்து - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற பொருட்களை தயாராக வைக்கவும். ராகி மாவை வெறும் வாணலியில் வாசனை வரும் வறுக்கவும்.
மாவு ஆறியதும் உப்பு சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசறவும். ஈரப்பதம் சரியாக இருக்க வேண்டும். மாவின் பதம் கையால் பிடித்தால் கொழுக்கட்டை போல பிடிக்க வரவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும். பிசறிய மாவை 15 நிமிடம் ஊற விடவும்.
புட்டு குழாயில் (அ) இட்லி தட்டில் அடியில் சிறிது தேங்காய் வைத்து அதன்மேல் மாவை நிரப்பி மீண்டும் மேலே தேங்காய் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
10 முதல் 15 நிமிடத்தில் புட்டு வெந்து விடும்.
உப்புமா செய்ய வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயத்திற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வேக வைத்த புட்டை உதிர்த்து சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான ராகி புட்டு & உப்புமா தயார். சட்னி அல்லது சர்க்கரையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.