ராகி குழாய் புட்டு

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 2 கப்

வெல்லம் - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

பொடியாக்கிய ஏலக்காய் - 3

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ராகி மாவை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து புட்டு மாவுக்கு பிசையவும்.

இதனுடன் உப்பு சேர்த்து ஜல்லடையில் சலிக்கவும்.

பின் இதனுடன் வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து (உதிர் உதிராக) வைக்கவும்.

அதற்கென்று உள்ள குழாயில் ஆவி வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக பொலபொலவென போட்டு வேக வைக்கவும்.

வெந்ததும் எடுத்து துண்டுகளாக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: