ரவை அடை (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - கால் கிலோ

அரிசி மாவு - ஐம்பது கிராம்

காரட் - ஒன்று

பீன்ஸ் - பத்து

பச்சை மிளகாய் - மூன்று

வெங்காயம் - ஒன்று

தேங்காய் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

நறுக்கிய மல்லி இலை - இரண்டு டேபிள் ஸ்பூன்

தயிர் - ஐம்பது மில்லி

உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - ஐம்பது மில்லி

நெய் இரண்டு - டேபிள் ஸ்பூன்

செய்முறை:

தயிர், இருநூறு மில்லி தண்ணீர், உப்பு, ரவை, அரிசிமாவு எல்லாம் கலந்து சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, பீன்ஸ் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

காரட்டை துருவி வைக்கவும். நெய்யை உருக்கி எண்ணெயுடன் கலந்து வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மிளகாய், பீன்ஸ், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி பிறகு காரட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தேங்காய் துருவல், மல்லி இலை சேர்த்து இறக்கி, மாவில் போட்டு கலக்கவும்.

மாவு இட்லிமாவை விட சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும். கல் சூடானதும் எண்ணெய் தடவி, ஒரு சிறிய கரண்டி மாவை ஊற்றவும். நாலு அங்குல விட்ட அளவிற்கு லேசாக பரப்பினால் போதும்.

சுற்றி எண்ணெய் விட்டு ஒரு பக்கம் சிவந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்: