ரவா தோசை (3)
தேவையான பொருட்கள்:
ரவை - 2 கப்
மைதா மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு கப்
தண்ணீர் - தேவையான அளவு
மிகப்பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
துருவிய கேரட் - சிறிதளவு
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 3
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 7
கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ரவை, மைதா மாவு, அரிசி மாவு இவற்றை ஒன்றாக கலக்கவும். பின் உப்பு, தயிர், தேவையான தண்ணீர் விட்டு கட்டி தட்டாமல் கரைக்கவும். 2 மணி நேரம் தனியாக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின் கரைத்த மாவில் துருவிய கேரட், நறுக்கிய கொத்தமல்லி இலை, தாளித்தவை சேர்த்து கலக்கவும்.
மாவு கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் விட்டு கலக்கவும். கனமான தோசைக்கல்லை சூடாக்கவும்.
பின் ஒரு கரண்டி மாவெடுத்து முதலில் ஓரத்ததில் சுற்றிலுமாக ஊற்றி பின் நடுவில் ஊற்றவும். தோசையின் மேல் சிறிதளவு எண்ணெய் விடவும்.
தோசை பொன்னிறமாக மாறியவுடன் திருப்பிப்போட்டு சுடவும். நன்கு முறுகியவுடன் இறக்கவும்.