ரவா சோள இட்லி
0
தேவையான பொருட்கள்:
ரவா- 1 கப்
தண்ணீர்- 1/2 கப்
தயிர்- 1/2 கப்
இலேசாக உப்பிட்டு வெந்த சோள முத்துக்கள்- 1/2 கப்
மிகப்பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
துண்டாக நறுக்கிய முந்திரிப்பருப்புக்கள் - 1/4 கப்
சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
பொடியாக அரிந்த குடைமிளகாய் - 1/2 கப்
தேங்காய்த்துருவல்- 1/2 கப்
நெய் - 8 மேசைக்கரண்டி
பொடியாக அரிந்த கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நெய்யை ஒரு வாணலியில் கொட்டி அதை சூடாக்கவும்.
அதில் முந்திரிப்பருப்பை முதலில் வறுத்தெடுத்துக்கொண்டு, பின் ரவாவைச் சேர்த்து வறுக்கவும்.
ரவா ஆறியதும் அதில் மற்ற அனைத்துப்பொருள்களையும் சேர்த்துக் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு இட்லித்தட்டுக்களில் ஊற்றி இட்லிகளாய் வார்த்தெடுக்கவும்.