ரவா இட்லி (6)
தேவையான பொருட்கள்:
வெள்ளை ரவை - 1 டம்ளர்
கேரட் - 1 (துருவியது)
பெரிய வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - சிறிது
பச்சை மிள்காய் - காரத்திற்கு ஏற்ப
தயிர் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - தேவையான அளவு
கடலை பருப்பு - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை துருவி வைக்கவும், பச்சை மிளகாய் மட்டும் தனியாக காரத்துக்கு ஏற்ப மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும், பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், அரைத்த பச்சை மிளகாய் போட்டு வாசம் போகும் வரை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் அதோடு ரவையை கொட்டி 5 நிமிடம் வதக்கவும்.
பின் வதக்கிய அனைத்தையும் ஆற வைக்கவும், ஆறிய பிறகு தயிர், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்துக் கொள்ளவும்.
இட்லி தட்டில் துருவிய தேங்காய், கேரட் வைத்து அதன் மேல் இந்த மாவை ஊற்றி, இட்லியை போல வேக வைத்து எடுக்கவும். சுவையான ரவா இட்லி ரெடி.
குறிப்புகள்:
இதற்கு தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.