மொறு மொறு அடை
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
கடலை பருப்பு - அரை கப்
உளுத்தம் பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
பாசி பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 11
மிளகு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் பல் - மூன்று மேசைக்கரண்டி(விருப்பபட்டால்)
செய்முறை:
அரிசி, மிளகாய் வற்றல் மற்றும் பருப்புகள் அனைத்தையும் மூன்று மணி நேரம் ஊற வைத்து, கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு மணி நேரம் வைத்திருந்து பின்னர் அதனுடன் சிறியதாக நறுக்கின தேங்காய் பல், பொடியாக நறுக்கின கறிவேப்பிலை, ஒன்றிரண்டாக பொடித்த மிளகு, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாகியதும் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லியதாக தேய்த்து மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
நன்கு மொறு மொறுப்பாக ஆனதும் திருப்பி போடவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்து மொறு மொறுப்பானவுடன் எடுத்து தக்காளி சாஸ் அல்லது எந்த வித சட்னி சாம்பார் வைத்தும் சாப்பிடலாம்.