மைதா ரொட்டி
தேவையான பொருட்கள்:
மைதா - 2 கப்
தண்ணீர் - 1 கப்
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பரந்த பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய்யை கலந்து வைக்கவும்.
பிறகு தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் ஒரு மரத்தடி கொண்டு கிளற கிளற மைதாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றுங்கள்.
ஒரு கப் தண்ணீரையும் ஊற்ற தேவையில்லை. 3/4 கப் ஊற்றிய பின் சிறிது சூடாறியதும் கை கொண்டு பிசைந்து பாருங்கள். தண்ணீர் தேவைக்கு இன்னும் ஊற்றலாம்.
மாவு சப்பாத்திக்கு பிசைவது போல் கையில் ஒட்டாமல் திரண்டு வரும். பின் இதனை சிறு சிறு உருண்டைகளாக்கி வைக்கவும்.
சிறிது மைதாவை தூவி சப்பாத்தி போல் மிக மெல்லியதாக பரத்தி அதன் மேல் நெய்யை தடவவும்.
பின் மேலிருந்து கீழ் கீழிருந்து மேல், இடம் வலம் என நான்கு புறத்தையும் உள்ளிழுத்து மூடிவிடவும். இதே சமயம் ஒரு ஃபானை காயவைக்கவும்.
மடக்கி வைத்த ரொட்டி மாவை ஒவ்வொன்றாக தேய்த்து சிறிது நெய்யை ஃபானில் போட்டு அதன் மேல் பரத்திய ரொட்டியும் போட்டு சப்பாத்தி போல் இருபுறமும் சுட்டு எடுக்கவும்
ஒவ்வொன்றாக பரத்த பரத்தவே சுட்டு எடுக்கலாம். அதற்கு தீயை மிதமாக வைக்கவும். இப்பொழுது சுவையான மைதா ரொட்டி தயார்.