மைதா ரவை தோசை
0
தேவையான பொருட்கள்:
மீந்து போன தோசை மாவு - 1 கப்
மைதா - 1/4 கப்
ரவை - 1/2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ரவையை ஐந்து நிமிடம் ஊற வைத்து அத்துடன் மைதா, தோசை மாவு, வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி ஐந்து நிமிடம் ஊறியதும் தோசைகளாக வார்க்கவும்.