மைதா நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்:
மைதா - 1/2 கிலோ
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 4
புதினா - சிறிது
பச்சை மிளகாய் - 4
காய்ந்த மிளகாய் - 8
இஞ்சி - சிறுதுண்டு
கருவேப்பிலை - சிறிது
கொத்துமல்லித்தழை - சிறிது
செய்முறை:
மைதாவை நன்கு சலித்து, குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வேகவைத்த மாவை உப்பு சேர்த்து குளிர்ந்த நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிறகு இடியாப்ப அச்சில் இட்டு பிழிந்து கொள்ளவும்.
தக்காளி, புதினா, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், இஞ்சி இவைகளை மிக்ஸியில் இட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
காய்கறிகளை நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சிறிது நேரம் வதக்கவும்.
அதனுடன் அரைத்த விழுது, சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் தயாரித்து வைத்துள்ள நூடுல்ஸை கொட்டிக் கிளறவும். அதன் மேல் கருவேப்பிலை, கொத்துமல்லி தூவி இறக்கவும்.