மைதா இனிப்பு தோசை
0
தேவையான பொருட்கள்:
மைதா - 1/2 கப்
சர்க்கரை - 1/4 கப்
பால் - 1/2 கப்
முட்டை - 1
உப்பு - ஒரு பின்ச்
தேங்காய் துருவல் - 1/2 கப்
சோம்பு - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - 1/2
நெய் - தேவையான அளவு
செய்முறை:
நெய் சர்க்கரை தவிர மற்ற பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். தோசை மாவை விட சற்று இளகியதாக தேவைக்கு பால் சேர்த்து கரைக்கவும்.
அதனை மெல்லிய தோசைகளாக ஊற்றி நெய் தெளித்து சுடவும். உள்ளே சர்க்கரை தூவி மடக்கி பரிமாறவும்.