மைதா அடை
0
தேவையான பொருட்கள்:
மைதா - 2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மல்லித்தழை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - சுவைக்கு
செய்முறை:
வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லி இவற்றை மிகப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
இதில் மஞ்சள் பொடி, உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கலக்கவும்.
மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து கூடவே தேவையான அளவு நீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
தவாவை அடுப்பில் வைத்து சூடேறியதும் துணியால் துடைத்து விட்டு, சிறிது நீர் தெளித்து ஒரு குழிக்கரண்டி அளவு மாவை எடுத்து நடுவில் ஊற்றி மெல்லிய தோசை வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் மறுபுறம் திருப்பிப்போடவும்.
சட்னி, சாம்பார், மட்டன், சிக்கன், மீன் குழம்பு அனைத்துக்கும் பொருந்தும்