மேத்தி ரொட்டி (1)
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை - ஒரு கட்டு
கோதுமை மாவு - 1/4 கிலோ
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
ஓமம் (விருப்பப்பட்டால்) - சிறிது
எண்ணெய் (விருப்பப்பட்டால்) - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கீரையை ஆய்ந்து மண் போக கழுவி எடுத்துக்கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு சீரகத்தூள், உப்பு போட்டு வதக்கவும். தண்ணீர் ஊற்ற தேவையில்லை அதில் தண்ணீர் ஊறும், வெந்தவுடன் அணைத்து விடவும்.
அது 2 டேபிள்ஸ்பூன் அளவுக்கு வந்துவிடும், அதனுடன் அந்த பாத்திரத்திலேயே மாவு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து, விருப்பபட்டால் எண்ணெய் சிறிது சேர்த்து பிசறி அரை மணி வைக்கவும்.
பின்பு அதனை ஆறு உருண்டைகளாக ஆக்கவும்.
மாவை வட்ட வடிவில் பரத்தி தவாவில் ஒன்றன் பின் ஒன்றாக சுட்டு எடுக்கவும். தேவையானால் எண்ணெய் சிறிது தடவி பிரட்டலாம்.
குறிப்புகள்:
இதனை தால் அல்லது ரைத்தா தொட்டு சாப்பிடலாம்.