முருங்கைக்கீரை தோசை
0
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 5 அல்லது 6 கப்
முருங்கைக்கீரை - 2 கப்
தக்காளி -1
சிறிய வெங்காயம் -10
சீரகம் - 1/2 தேக்கரண்டி
காயப்பொடி- 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கவும். சீரகம் போட்டு தாளித்து பொடியாக அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
பின் பொடியாக அரிந்த தக்காளி, காயம் சிறிது உப்பு சேர்த்து குழைய வதக்கவும். கீரையைச் சேர்த்து நன்கு வெந்து சுண்டியதும் இறக்கி ஆற வைக்கவும்.
பின் மாவில் சேர்த்து நன்கு கலக்கி மெல்லியதாக தோசைகள் சுட்டெடுக்கவும்.