முட்டை பரோட்டா (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/2 கிலோ

வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 1

முட்டை - 3

எலும்பில்லாத கோழி - 4 அல்லது 5 துண்டுகள்

இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

மஞ்சள் தூள் - சிறிதளவு

மிளகாய் தூள் - சிறிதளவு

கரம் மசாலா தூள் - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். கோழியை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், கோழி துண்டுகள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு நன்கு வதக்க வேண்டும். சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மைதா அல்லது கோதுமை மாவை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிணைந்து வைத்துக் கொள்ளவும். முட்டையை ஒரு கிண்ணத்தில் அடித்து வைத்துக்கொள்ள வேண்டும்

மாவை எடுத்து சப்பாத்திக்கு வளத்துவது போல் ஓரங்கள் மெல்லியதாக செய்துக் கொள்ளவும்.

அதில் ஒரு தேக்கரண்டி வெங்காய கலவையை வைத்து,அதன் மேல் 3 ஸ்பூன் முட்டையை ஊற்றி விடவும்.

படத்தில் உள்ளது போல் முதலில் மேல் கீழ் பக்கங்களை உள்ளே வைத்து மடிக்கவும். பின்னர் இடது வலது பக்கங்களை (முட்டை வெளியே வராமல் இருக்கும்படி மடிக்கவும்.)

இதைப் போலவே மற்ற மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் பரோட்டாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

தீயை மிதமாக வைக்க வேண்டும். அதிகமான தீ இருந்தால் வெளியே பொரிந்து உள்ளே வேகாமல் இருக்கும்.

குறிப்புகள்: