முட்டை பரோட்டா

on on on off off 5 - Good!
3 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பரோட்டா - 4

முட்டை - 3

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி, மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.

பரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக்கி வைக்கவும். முட்டையை உடைத்து ஊற்றி, அடித்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, மிளகாய், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.

அடித்த முட்டை, மிளகு தூள் உப்பு சேர்த்து, நன்கு கிளறி, துண்டுகளாக்கி வைத்த பரோட்டாவையும் சேர்த்து, நன்கு கிளறவும்.

குறிப்புகள்: